சாலையோரக் கடையில் வெடிகுண்டு

மெகலாங்: இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் மெகலாங் என்ற இடத்தில் சாத்தே விற்கும் தள்ளுவண்டிக் கடையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. தள்ளுவண்டியில் பெண்களின் கைப்பைக்குள் இருந்த குண்டை சாத்தே விற்கும் அரிஃப் ரொஹ்மான் என்பவர் கண்டெடுத்தார். குண்டை வெடிக்க வைக்கும் தூள், வயர் கள், இணைப்பு, ஒரு கடிகாரம் போன்றவை அடங்கிய அந்த குண்டு டேப்பினால் சுற்றப்பட்டிருந்தது. அராபிய மொழியில் குறிப்பு எழுதப்பட்ட துண்டுக் காகிதமும் அதிலிருந்தது.அவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த போலிசார், குண்டைச் செயலிழக்கச் செய்தனர். குண்டின் ஒரு பகுதியை போலிசார் சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!