சீனாவின் போக்கு பற்றி கவலையில்லை: டுட்டர்டெ

மணிலா: சீனாவின் தெற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென்சீனக் கடலில் சீனா குட்டித் தீவு ஒன்றை செயற்கையாக உரு வாக்கி அங்கு ராணுவ நிலை களை ஏற்படுத்த முயற்சி செய் கிறது என்பது ஒன்றும் பெரிய அச்சுறுத்தல் இல்லை என பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டெ (படம்) கூறியுள்ளார். தென்சீனக் கடல் பகுதிக்கு பிலிப்பீன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான், புருணை ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பாக சீனாவுக்கு எதிராக ஐ.நா. சட்டதிட்டங் களின்படி அமைக்கப் பட்டுள்ள அனைத்துலக அள வில் பேசித் தீர்க்க நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பீன்ஸ் 2013 ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது. இதில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பில், "தென் சீனக்கடலில் சர்ச்சைக் குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்குச் சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை," எனக் கூறப்பட்டது. இல்லை," எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் சீனாவுடனான மோதலைத் தவிர்ப்பதாகவும் அனைத்துலகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி சீனாவுக்கு நெருக் குதல் கொடுக்கத் தேவையில்லை எனவும் அதிபர் டுட்டர்டெ கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!