கணவர் பெயரில் 1மி. ரிங்கிட்டுக்கு காப்புறுதி; உயிர் பயத்தில் கணவர்

கணவர் பெயரில் 1மி. ரிங்கிட்டுக்கு காப்புறுதி; உயிர் பயத்தில் கணவர்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் தமது பெயரில் 11 காப்புறுதித் திட்டங் களை தமது மனைவி வாங்கியுள்ள தால் தாம் உயிர் பயத்தில் இருப் பதாக முன்னாள் அரச மலேசிய ஆகாயப் படை சார்ஜண்ட் ஒருவர் போலிசில் புகார் செய்துள்ளார்.

அந்த காப்புறுதித் திட்டங்களை தமது மனைவி தமக்குத் தெரி யாமலே போலிக் கையெழுத்து போட்டு வாங்கியுள்ளதாக இவர் கூறுகிறார். அத்துடன், ஏற்கெனவே தம் மைக் கொல்ல முயற்சி நடந் திருப்பதாகவும் அந்த 42 வயது ஆடவர் விளக்கினார்.