காரில் கருகிய நிலையில் சடலம்; கிரேக்க தூதர் என சந்தேகம்

காரில் கருகிய நிலையில் சடலம்; கிரேக்க தூதர் என சந்தேகம்

1 mins read
448b2a5a-22e4-4264-b5ca-baf7a69cdc67
-

சாவ் பாலோ: பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் கார் ஒன்றில் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் கிரேக்க தூதராக இருக்கலாம் என்று பிரேசில் போலிசார் நம்புவதாக அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான குளோபோ கூறுகிறது. பிரேசிலுக்கான கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிடிஸ் கடந்த திங்கட்கிழமையன்று தமது பிரேசிலிய மனைவியின் நண்பர்களை பிரேசிலின் ஏழ்மையான, வன்முறைக்கு பெயர்போன பகுதியை விட்டுச் சென்றபின் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.