600,000 டாலர் கொடுத்து ஒரு மீனை விலைக்கு வாங்கியவர்

தோக்கியோ: ஜப்பானின் 'டுனா மன்னர்' என்றழைக்கப்படும் தொழில்முனைவர் கியோ‌ஷி கிமுரா, ஃபுலுபின் டுனா மீனை 74.2 மில்லியன் யென் (600,000 அமெரிக்க டாலர்) கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார். ஜப்பானில் பிரபல சு‌ஷி உணவகங்களின் உரிமை யாளரான கியோ‌ஷி கிமுரா, தோக்கியோ மீன் சந்தையில் ஏல விற்பனையில் 212 கிலோ கிராம் எடையுள்ள அந்த மீனை விலைக்கு வாங்கினார். அதிக விலை கொடுத்து அந்த மீனை வாங்கிய போதிலும் ஏலத்தில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைவதாக கியோ‌ஷி கிமுரா கூறினார். அந்த டுனா மீனின் ஒரு சிறிய பகுதி சுமார் 85 அமெரிக்க டாலர் விலையில் விற்கப்படும் என்று தெரிகிறது. ஜப்பானில் உள்ள திரு கிமுராவின் 51 உணவகங்களில் சமைத்த டுனா மீன் கறி அதிக விலைக்கு விற்கப்படும்.

மீன் சந்தையில் அதிக விலைக்கு டுனா மீனை வாங்கிய கியோ‌ஷி கிமுரா. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!