தாய்லாந்தில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

பேங்காக்: தாய்லாந்தின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரி கள் கூறியுள்ளனர். கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக விமானச் சேவை களும் தாமதம் அடைந்துள்ள தாகவும் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் ஒன்பது மாநிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரி வித்தது. குறைந்தது 120,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் சாலைகளிலும் ரயில் பாதையிலும் மழைநீர் தேங்கி நிற்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இதுவரை இப்படியொரு வெள்ளப்பெருக்கைப் பார்த்ததே இல்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். வெள்ளப்பெருக்கினால் பாதிக் கப்பட்ட நரதிவாட் மாநிலத்திற்கு நேற்று சென்றிருந்த அரசாங்க அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் கூறின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!