டிரம்ப் வெற்றியை கொண்டாடிய ரஷ்ய உயர் அதிகாரிகள்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடந்த தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும் அந்த வெற்றியை ரஷ்ய மூத்த அதிகாரிகள் கொண்டாடி மகிழ்ந்ததை அமெரிக்க உளவுத் துறை தகவல் காட்டுவதாக வா‌ஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தல் முடிவை ரஷ்ய அதிகாரிகள் உற்சாகத்துடன் கொண்டாடியதை இடைமறித்து திரட்டப்பட்ட தகவல்கள் காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக வா‌ஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி அறிக்கை கூறுகிறது.

தேர்தலில் திரு டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து ரஷ்யர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வா‌ஷிங்டன் போஸ்ட் நாளேட்டிடம் கூறினார். அமெரிக்கத் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் கணினி ஊடுருவல் பற்றி முன்கூட்டியே ரஷ்ய அதிகாரிகள் சிலருக்கு தெரிந்திருக்கும் என்று அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!