தேர்தலில் டிரம்பிற்கு உதவ விரும்பிய புட்டின்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற ரஷ்ய அதிபர் புட்டின் விரும்பியதாக அமெரிக்க உளவுத் துறை அறிக்கை கூறுகிறது. அமெரிக்கத் தேர்தலில் ஹில்லரி கிளின்டனின் தேர்தல் பிரசாரத்தை சீர்குலைக்கும் நோக் கத்திலும் டிரம்ப்பினை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திலும் திரு புட்டின், கணினி ஊடுருவல் மூலம் ஹில்லரி கிளின்டன் உள்ளிட்ட முக்கியமானவர்களின் மின்னஞ்சல் தகவல்களைத் திரட்ட ரஷ்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா ஏற்கெனவே மறுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவின்பேரில் ஒரு பிரிவினர் தீவிரமாக செயலாற்றியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் ஹில்லரி கிளின்டன் வேட்பாளர் ஆவதற்கு ஆதரவு திரட்டி வந்தபோது அவரது நன்மதிப்பை குறைப்பதற்கான முயற்சிகளும் அவர் வேட்பாளரான பின்னர் ஹில்லரியை வீழ்த்தி, டோனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்யவும், அமெரிக்க ஜனநாய கத்திலும் தேர்தல் நடவடிக்கை யிலும் தலையிடுவதற்கு ரஷ்யா முயன்றதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

டோனல்ட் டிரம்பு, புட்டின். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!