தைவானில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்

தைவானில் அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் மாற்றங்களைக் கொண்டுவர தைவானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு அங்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் டாய்சுங் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பென்சன் சீர்திருத்தம் பற்றிய கருத்தரங்கிற்கு சில குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒலிபெருக்கிக் கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தியபோது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் கூறின. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!