சிலையை அகற்ற ஜப்பானியப் பிரதமர் அபே வலியுறுத்து

தோக்கியோ: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமை களாகச் சேவை புரிந்த தென் கொரியப் பெண்களை நினைவு கூறும் வகையில் தென்கொரி யாவில் ஓர் இளம் பெண்ணின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலை கடந்த மாதம் அங்குள்ள ஜப்பானியத் தூதரகத் திற்கு வெளியில் வைக்கப் பட்டது. அந்த சிலையை அங்கிருந்து அகற்றுமாறு தென்கொரியாவை ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே கேட்டுக்கொண்டுள்ளார். அந்த சிலை தொடர்பாக ஜப்பானுக்கும் தென்கொரியா வுக்கும் இடையே பூசல் நீடிக்கும் வேளையில் தென்கொரியா விலிருந்து தூதரை ஜப்பான் மீட்டுக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ராணுவ வீரர்கள் தங்கிருந்த பகுதிகளில் பாலியல் அடிமைகளாக சேவை செய்யுமாறு பல பெண்கள் கட்டாயப்படுத்தப் பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய வீரர்களால் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்ட கொரியப் பெண்களை நினைவுகூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இளம் பெண்ணின் சிலை தென்கொரியாவில் ஜப்பானியத் தூதரகத்திற்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!