ஒபாமா: ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்தான் அதிபராக பதவியேற்ற போது இருந்த அமெரிக்காவைவிட இப்போதைய அமெரிக்கா சிறந்ததாக, பலமிக்கதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் ஜனநாயகத்தைக் கிள்ளுக்கீரையாக கருதும்பட்சத் தில் அந்த முறைக்கு மிரட்டல் ஏற்பட்டுவிடும் என்றார் அவர். அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப் பின அதிபர் என்ற பெருமை ஒபாமாவுக்கு உண்டு. எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஒபாமாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு சிகாகோ நகரில் செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஒபாமா இறுதி உரை நிகழ்த்தினார்.

உலகையும் அமெரிக்காவையும் பாதிக்கும் பல அம்சங்கள் பற்றி தனது உரையில் அவர் குறிப் பிட்டார். "கடின உழைப்பின் மூலம் அமெரிக்காவை ஜனநாயகப் பாதை யில் கொண்டு செல்லுங்கள். அமெரிக்க ஜனநாயகத்தைக் காப் பாற்றுங்கள்," என்று குறிப்பிட்ட ஒபாமா, எதிர்காலம் சிறந்த கை களில் இருக்குமென்ற நம்பிக்கை தன்னிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். "அமெரிக்கர்கள் தளர்ந்து போகாதவரை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நம்மிடம் போட்டி போட முடியாது. "அமெரிக்கர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். பெண்வெறுப்பு, நிறவெறி, பாலியல் பாகுபாடு, மத வெறுப்பு போன்றவற்றை மறந்து ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்," என்று ஒபாமா மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!