28 போராளிகளை சீனாவுக்கு திருப்பி அனுப்பியது மலேசியா

பெய்ஜிங்: மலேசியா 2013ஆம் ஆண்டிலிருந்து 28 உய்கர் போராளிகளை சீனாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது என்று மலேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாஹிட் கூறினார். அவர்கள் அனைவரும் மேற்கு சீனாவில் உய்கர் போராளிகள் நிறுவிய கிழக்கு துருக்கிய இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்வதற்காக துருக்கிக்குச் செல்லும் வழியில் மலேசியாவில் தங்கிச் சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் திரு ஸாஹிட் கூறினார். சீனா மற்றும் மலேசியாவின் உளவுத்துறை அதிகாரிகளின் தகவல் பரிமாற்றத்தின் விளைவாக அவர்களைக் கைது செய்ய முடிந்தது என்றும் அவர் சொன்னார். "சீன உளவுத் துறையினர் தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் மலேசியாவைவிட்டுச் செல்வதற்கு முன்பு அந்தப் போராளிகளைக் கைது செய்ய முடிந்தது," என்று திரு ஸாஹிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!