‘கணினி ஊடுருவலில் ரஷ்யா ஈடுபட்டது’

வா‌ஷிங்டன்: அடுத்த வாரம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னர் கணினி ஊடுருவலில் ரஷ்யா ஈடுபட்டதை முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதன் முறையாக திரு டிரம்ப் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அவர் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள் உள்பட பல்வேறு விவகாரங்களைப் பற்றிப் பேசிய டிரம்ப், கணினி ஊடுரு வலுக்கு ரஷ்யாவே காரணம் என்று தான் நம்புவதாகத் தெரி வித்தார்.

டிரம்ப் தொடர்பான ரகசியத் தகவல்களை ரஷ்யா வைத் திருப்பதாகவும் அதை வைத்து டிரம்ப்பை ரஷ்யா மிரட்டி வருவதாகவும் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். "என்னைப் பற்றிய ரகசிய விவரங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாகக் கூறப்படும் தகவல் பொய். ரகசியத் தகவலை வைத்துக்கொண்டு என்னை ரஷ்யா மிரட்டி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் ஆதாரமற்றது," என்று டிரம்ப் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!