பிரிட்டன் எதிர்நோக்கும் மோசமான வெள்ளப்பெருக்கும் பனியும்

பிரிட்டன் எதிர்நோக்கும் மோசமான வெள்ளப்பெருக்கும் பனியும்

1 mins read

லண்டன்: பிரிட்டனில் பல பகுதிகளில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் ஒரு சில பகுதிகளில் பனிப்பொழிவும் கடும் குளிரும் மக்களை பாதிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. இதனால் அவற்றைச் சமாளிக்க பிரிட்டன் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பிரிட்டனின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளிலிருந்து வெளியேறிச் செல்வது நல்லது என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.