இந்தோனீசியா: விசாரணைக்குப் பிறகு 8 பேர் விடுவிப்பு

ஜகார்த்தா: ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுடன் தொடர்பு வைத்திருந்த தான சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட 8 இந்தோனீசியர்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். ஐஎஸ் குழுவுடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இந்தோனீசியப் போலிசார் அந்த 8 பேரையும் விடுதலை செய்தனர். அந்த எட்டுப் பேரும் முதலில் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவுத் துறை அதிகாரி களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அக்கும்பலின் தலைவனின் கைத்தொலைபேசியில் 'வாட்ஸ் அப்' பக்கத்தில் ஐஎஸ் கொடி மற்றும் "காலணி குண்டு" புகைப் படம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தோனீசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 16 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட அந்த எட்டுப் பேரையும் இந்தோனீசிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 24 மணி நேரம் விசாரித்த பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ரியாவ் தீவு போலிஸ் பேச்சாளர் சப்டோனோ எர்லாண்ட் கூறினார். மேற்கு சுமத்ராவைச் சேர்ந்த அந்த 8 பேரும் ஏழு நாட்கள் வரை தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு சென்றுவிட்டு கடந்த செவ்வாய்க் கிழமை சிங்கப்பூர் வந்தனர்.

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டனர். அவர்களை மலேசிய அதிகாரிகள் இந்தோனீசியாவுக்கு திருப்பி அனுப்பினர். இந்தோனீசியாவின் ரியாவ் தீவில் அவர்கள் விசாரிக்கப் பட்டனர். அவர்களில் யாருக்கும் ஐஎஸ் போராளிகள் குழுவுடன் தொடர்பு இல்லை என்பதை மாநில உளவுத் துறை அதிகாரி களும் இந்தோனீசிய போலிசாரும் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ரியாவ் தீவுப் போலிஸ் பேச்சாளர் சப்டோனோ எர்லாண்ட் கூறினார். இந்தோனீசியப் போலிசார் ஐஎஸ் குழுவுடன் தொடர்புடைய சந்தேகப் பேர்வழிகள் பலரை அண்மையில் கைது செய்தனர்.

பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க போலிசார் பல இடங்களில் அதிரடி சோதனை களை மேற்கொண்டு வருகின் றனர். பல இடங்களில் பாதுகாப் பினை இந்தோனீசியப் போலிசார் வலுப்படுத்தியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!