அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம்; தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

பேங்காக்: தாய்லாந்தில் அரசிய லமைப்பு சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப் பினர்கள் வாக்களித்துள்ளனர். புதிய மன்னரின் வேண்டு கோளுக்கு இணங்க அரசிய லமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவற்றை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் பேங்காக் தகவல்கள் கூறின. இதன் மூலம் தாய்லாந்தில் தேர்தல் தாமதம் அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடைபெறும் என்று தாய்லாந்து பிரதமர் முன்னதாக உறுதி அளித்திருந்தார். உத்தேச அரசியலமைப்பு சட்டத்தில் பல மாற்றங்களைச் செய்யுமாறு புதிய மன்னர் வ‌ஷிரலங்கோன் அலுவலகம் கேட்டுக்கொண்டதாக பிரதமர் பிரயுத் சான் சா கூறினார்.

அந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றால் இடைக்கால அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அந்த மாற்றங்களுக்கு ஆதர வாக நாடாளுமன்ற உறுப்பினர் கள் 228 பேர் நேற்று வாக்களித் ததாக பிரதமர் கூறினார். இந்த மாற்றம் காரணமாக தேர்தல் இந்த ஆண்டுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு நடைபெறக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!