'பெரிய கப்பல்களை தாக்கும் கடற்கொள்ளையர்கள்'

'பெரிய கப்பல்களை தாக்கும் கடற்கொள்ளையர்கள்'

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் அருகே உள்ள கடல் பகுதியில் பெரிய வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஆசிய கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கடற்கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான வட்டார குழு ஒன்றின் தலைவர் கூறியுள்ளார். அக்கப்பல்களில் உள்ள சிப்பந்திகளைப் பிணைப்பிடித்துச் செல்வதன் மூலம் அதிப் பணத்தை பிணைப்பணமாகப் பெற முடியும் என்று கடற்கொள்ளையர்கள் நம்புவதால் அவர்கள் பெரிய கப்பல்களைத் தாக்குவதில் கவனம் செலுத்துவதாக வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டுக் குழுவின் நிர்வாக இயக்குநர் மசஃபுமி குரோக்கி கூறினார். பிலிப்பீன்ஸ் கடல் பகுதியில் சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் 16 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கப்பல் சிப்பந்திகள் 48 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் வட்டார கடல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.