துருக்கி: 39 பேரைக் கொன்றவன் கைது

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரவு விடுதியொன்றில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியால் சுட்டு 39 பேரைக் கொன்றவனை அந்நாட்டு போலிசார் பிடித்துவிட்டனர். அப்துல் காதிர் மஷாரிபோவ் என்ற அவன் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் இஸ்தான்புல்லின் எசென்யுர்ட் மாவட்டத்தில் மறைந்திருந்தபோது அவன் பிடிபட்டான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவனைக் கைது செய்தபோது அவனுடைய நான்கு வயது மகனும் உடன் இருந்ததாகக் கூறப்பட்டது. அவன் மறைந்திருந்த வீடு, கிர்கிஸ்தானைச் சேர்ந்த அவனு டைய நண்பனுக்குச் சொந்த மானது என்றும் அந்த நண் பனையும் அங்கிருந்த மேலும் மூன்று பெண்களையும் போலிஸ் கைது செய்தது என்றும் துருக்கி ஊடகச் செய்திகள் கூறுகின்றன. விசாரணைக்காக மஷாரி போவை போலிஸ் தலைமையகத் திற்கு அழைத்துச் செல்லும் முன்னர் அவனுக்கு மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட இருக் கின்றன என்று ஹுரியத் நாளிதழ் தெரிவித்தது.

இஸ்தான்புல் இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒத்துக்கொண்ட அப்துல் காதிர் மஷாரிபோவ். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!