டாக்டர் மகாதீர்: நில விற்பனை நாட்டு நலனுக்கு எதிரானது

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், மலேசியாவில் சீன முத லீட்டாளர்களுக்கு நிலம் விற்கப் பட்டது நாட்டு நலனுக்கு எதி ரானது என்று கூறியிருக்கிறார். இது, தயாரிப்புத் துறையில் இடம்பெறும் வெளிநாட்டு முதலீடு போல அல்ல என்று அவர் குறிப்பிட்டார். மலேசியாவுக்கு அருகே ஜோகூர் நீரிணையில் நான்கு தீவுகளை உருவாக்கும் 60 பில் லியன் அமெரிக்க டாலர் திட்டத் துக்கு டாக்டர் மகாதீர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதனால் அவரைக் கடுமை யாக விமர்சித்த ஜோகூர் சுல் தான் இப்ராகிம் இஸ்கந்தார், டாக்டர் மகாதீருக்கு நாட்டு நலனைவிட சொந்த நலனே முக்கியமாகப்படுகிறது என்று சாடியிருந்தார். ஜோகூரில் சீனா முதலீடு செய்வதற்கு எதிராக சில அர சியல்வாதிகள் திரித்துக் கூறு வது வருத்தமளிக்கிறது என்றும் ஜோகூர் சுல்தான் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் நேற்று விளக்கம் அளித்த டாக் டர் மகாதீர், "ஆமாம் நானும் ஆட்சியில் இருந்தபோது அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி யளித்தேன், ஆனால் மலேசிய நிலம் விற்கப்படவில்லை," என்றார்.

நேரடி வெளிநாட்டு முதலீடு தயாரிப்புத் துறையில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டுக்குப் பலன் அளிக்கும் என்று டாக்டர் மகாதீர் கூறுகிறார். கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!