நாக்கின் உதவியால் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்த நோயாளி

வேன்கூவர்: கனடாவின் வான் கூவரில் உள்ள வீட்டில் மோட்டார் பைக்கில் மலையேறும் முன்னைய சாகச வீரர் ஒருவர், பக்கவாதத் தால் பாதிக்கப்பட்டதால் நிலை குலைந்து கீழே விழுந்தார். அந்த சமயத்தில் உதவ யாரும் இல்லாததால் அவர் தமது கன்னத் தைப் பயன்படுத்தி தவழ்ந்து சென்று 25 மீட்டர் தொலைவில் இருந்த ஐபோனை எட்டிப்பிடித்து 'ஸ்ரீ' குரல் செயலியை நாக்கின் உதவியால் செயல்படுத்தினார். அதன் மூலம் அவசர உதவி எண் 911க்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அவரை வான்கூவர் பொது மருத்துவ மனையில் சேர்த்தது.

அவசர சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நிலை தேறி வருகிறது. அவரது உடலின் வலது பக்கப் பகுதியிலும் உணர்வுகள் திரும்பியுள்ளன. இம்மாதம் ஜனவரி 6ஆம் தேதி ஆண்ட்ரு சோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தலை சுற்றுவதைப்போல அவர் உணர்ந் தார். மேலும் அவரது கழுத்து, கைகள் மரத்துப்போயின. இதனால் அவர் அவசரமாக வீடு திரும்பினார். ஆனால் என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்குள் அவர் நிலைகுலைந்து கீழே விழுந் தார். சிகிச்சைக்குப் பிறகுதான் முதுகுத்தண்டில் ரத்த நாளம் வெடித்துவிட்ட விவரம் அவருக் குத் தெரிய வந்தது. ஆண்ட்ரு சோ தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன உறுதியுடன் போராடி உயிர் தப்பிய ஆண்ட்ரு சோ. படம்: என்பி (யு டியூப்)

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!