ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரிட்டிஷ் பிரதமர்

லண்டன்: ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதுபோல ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் இருக்க விருப்பமில்லை என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே பேசுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து அவர் முக்கிய உரையாற்றவிருக் கிறார். அப்போது பிரிட்டனின் நிலையை அவர் தெளிவுபடுத்தக் கூடும். அவரது உரையை ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளும் ஆவலுடன் எதிர் பார்த்துள்ளன.

"தங்கு தடையின்றி வர்த்தகம் செய்யவே பிரிட்டன் விரும்புகிறது. ஆனால் அதே சமயத்தில் ஒன்றியத்தில் பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் கால் பதிக்க பிரிட்டன் விரும்பவில்லை," என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் தமது உரையில் விளக்கமளிப்பார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே சந்தையிலிருந்து பிரிட் டன் விலகுவதற்கான அறிகுறிகளை பிரதமர் தெரசா மே வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரதமர் அலுவல கமான டவுனிங் ஸ்திரீட் 12 அம்ச பட்டியலைத் தயாரித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!