ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியே தீரும் என்று அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே நேற்று முன்தினம் ஆற்றிய உரை ஐரோப்பிய நாடுகளுக் கிடையே இரு மாறுபட்ட கருத்துகளுக்கு வழிவிட்டுள்ளது. ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் பிரிட்டிஷ் பிரதமரின் உரை இந்தப் பிரச்சினையில் "ஒரு தெளிவைக் கொ ண் டு வ ந் தி ரு ப் ப தா க , " கூறியுள்ளார். ஆனால், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று பொது வாக்கெடுப்பில் முடிவெடுத்த பிரிட்டன், அந்த முடிவை இன்னும் முறைப்படுத்தவில்லை என்று அவர் குறைகூறினார்.
"பிரிட்டிஷ் பிரதமர் தமது அரசின் திட்டங்களை வெளிப் படுத்தியிருப்பது வரவேற்கத் தக்கது," என்று கூறிய ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய சாசனத்தின் 50வது பிரிவின்படி முறைப்படி தான் வெளியேறும் திட்டத்தை முறையாக அறிவித்தாலன்றி ஒன்றியம் பிரிட்டனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட முடியாது எனத் தெளிவுபடுத்தினார். இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் பிரதமரின் உரை உண்மை நிலையை பிரதிபலிப்பதாக ஒன்றியத்தின் தலைவர் திரு டோனல்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.