டிரம்ப் நாளை பதவி ஏற்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக திரு டோனல்ட் டிரம்ப் நாளை பதவி ஏற்றுக் கொள்ளவிருக்கிறார். அமெரிக்காவின் 45வது அதிபராக திரு டிரம்ப் பதவி ஏற்கவிருக்கிறார். திரு டிரம்ப் பதவி ஏற்றுக் கொள்வதை நேரில் காண அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அமெரிக்காவின் பல பகுதிகளி லிருந்து வா‌ஷிங்டனுக்கு வந்த வண்ணமாக உள்ளனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பார்வையாளர்களுக் காக ஒதுக்கப்பட்ட இடங்களிலும் அணிவகுப்பு நடக்கக்கூடிய இடங்களிலும் பாதுகாப்பிற்காக தடுப்பு வேலிகள் போடப்பட்டுள் ளன. நாளை வா‌ஷிங்டன் மாலில் சுமார் 800,000 பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அமைதியான முறையில் நடைபெறும் பதவி மாற்றத்தை நேரில் காண மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லிண்டா கூல்ஸ் கூறினார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சிகாகோ விலிருந்து வா‌ஷிங்டன் வந் துள்ளார். திரு டிரம்ப் பதவி ஏற்றுக்கொள்ளும் நாள் வரலாற்று முக்கியத்துவமான தருணம் என்று கூறிய 35 வயதான அமெரிக்க மாது ஒருவர் அந்த முக்கிய நிகழ்வைக் காண தன் கணவருடன் கலிஃபோர்னி யாவிலிருந்து வா‌ஷிங்டன் வந் துள்ளதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!