மோசுல் நகரின் கிழக்குப் பகுதி முழுவதும் ஈராக்கியப் படையின் கட்டுப்பாட்டில் வந்தது

மோசுல் நகரின் கிழக்குப் பகுதி முழுவதும் ஈராக்கியப் படையின் கட்டுப்பாட்டில் வந்தது

1 mins read
58e7c35e-ef6e-4b82-92a6-c491486f56f0
-

மோசுல்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் கடுமையாக சண்டை யிட்டு வரும் வேளையில் அந்நகரின் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ஈராக்கிய அரசாங்கம் அறிவித்துள் ளது. கடந்த மூன்று மாதங்களாக மோசுல் நகரில் ஐஎஸ் போராளி களை எதிர்த்து ஈராக்கியப் படை சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில் அந்நகரின் மத்திய பகுதிக்குள் முன்னேறிச் செல்லும் அரசாங்கப் படை அந்நகரின் கிழக்குப் பகுதியை கைப்பற்று வதில் தாங்கள் வெற்றி அடைந் திருப்பதாக அறிவித்துள்ளது.

மோசுல் நகரில் அரசாங்கப் படை கைப்பற்றிய பகுதியில் நடந்து செல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி