பதவியேற்பு விழாவில் பங்கேற்க சமூக ஊடகங்கள் வழியாக அழைப்புவிடுக்கும் டிரம்ப்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் 58வது அதிபராக இன்று பதவி ஏற்கும் திரு டோனல்ட் டிரம்ப், பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற் கத் தமது ஆதரவாளர்களுக்கு இணையம் வழியாக அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்புக்கான பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடு களும் வெள்ளைமாளிகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் தடம் பதிக்க வருமாறு காணொளி ஒன்றைப் பதிவுசெய்து ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அதைப் பதிவேற்றி யுள்ளார் திரு டிரம்ப். சிலருக்குக் குறுந்தகவல் களாகவும் அனுப்பப்படும் இந்தக் காணொளி ப்ரீட்பார்ட் செய்தி இணையப்பக்கத்திலும் வெளியா னது. திரு டிரம்புக்கு வெள்ளை மாளிகையில் ஆலோசகராக விருக்கும் திரு ஸ்டீபன் பானோன் இந்த இணையத்தளத்தின் மேற் பார்வையாளராக இருந்தவர்.

இதற்கு முந்தைய அதிபர்களின் பதவியேற்பு விழாவைவிட இன்றைய விழாவில் ஆடம்பரம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சென்ற வாரம் பதவியேற்பு விழா பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், அது மிகவும் சிறப்பானதாக, அதிக அழகானதாக இருக்கும் என்றும் பெரும் கூட்டத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். சுமார் 1 மில்லியன் பேர் பதவி யேற்பு விழாவில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2009ஆம் ஆண்டு திரு ஒபாமா அதிபராகப் பதவியேற்ற போது 1.8 மில்லியன் மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது. இதற்கிடையே, சென்ற செவ் வாய்க்கிழ்மை வெள்ளை மாளிகை யில் பேராளர்களும் வெளிநாட்டுத் தூதர்களும் பங்கேற்ற இரவு விருந்தில் திரு டிரம்ப் கலந்து கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!