லிவர்பூல் வெற்றி

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணப் போட்டியில் நான்காவது நிலை லீக்கில் விளையாடும் பிளை மத்தை லிவர்பூல் ஒருவழியாக வென்றுள்ளது. நேற்று அதிகாலை பிளை மத்தின் சொந்த விளையாட்டரங் கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 1=0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இவ்விரண்டு குழுக்களும் லிவர் பூலின் அன்ஃபீல்ட் விளை யாட்டரங்கத்தில் மோதின. அந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சம நிலையில் முடிந்தது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வந்த பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார் லிவர்பூலின் தற்காப்பு ஆட்டக்காரர் லூகஸ் லெவா. இதுவே 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு லிவர்பூலுக்காக லூகஸ் போட்டிருக்கும் முதல் கோலாகும். ஆட்டத்தின் தொடக்கத் திலேயே கோல் போட்ட லிவர்பூல் அதனைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியபோதும் கூடுதல் கோல் போட முடியாமல் தவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!