மணிலா ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர்

மணிலா: அமெரிக்காவின் புதிய அதிபராக டோனல்ட் டிரம்ப் நேற்றிரவு பதவி ஏற்றுக் கொள்ளவிருந்த வேளையில் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் டிரம்ப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே ஒன்று கூடிய நூற்றுக்கணக்கானோர் டிரம்ப்பிற்கு எதிராக குரல் எழுப்பினர். தூதகரத்திற்கு அருகே சுமார் 300 பேர் ஒன்றுகூடிய தாகவும் அவர்கள் தங்கள் கைகளில் டிரம்ப்பிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டை களை வைத்திருந்ததாகவும் மணிலா தகவல்கள் கூறின. பிலிப்பீன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டுட்டர்டே பதவி ஏற்றது முதல் அமெரிக்காவுக்கும் பிலிப்பீன்சிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் கூறும் திரு டுட்டர்டே, அமெரிக்காவுடன் சில விஷயங்களில் ஒத்துழைக் கத் தயாராக இல்லை என்று அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!