மெல்பர்ன் மையப் பகுதியில் நேற்று நடந்த பயங்கர சம்பவம்

மெல்பர்ன்: மெல்பர்ன் நகரில் நேற்று மதியம் மக்கள் மீது வேண்டுமென்றே காரை மோதி நான்கு பேரைக் கொன்றவன் அதற்கு முன்னதாக காலை நேரத்தில் மெல்பர்ன் புறநகர் பகுதியில் அவனது சகோதர னைக் கத்தியால் தாக்கியவன் என்று ஆஸ்திரேலியப் போலிசார் நம்புகின்றனர். பின்னர் அவன் தனது காரில் ஒரு பெண்ணை பிணையாளி யாகப் பிடித்துச் சென்றதாகவும் மெல்பர்ன் மையப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாக அவன் அந்தப் பெண்ணை விடுவித்த தாகவும் நம்பப்படுகிறது.

அவன் ஏற்கெனவே போலி சாருக்குத் தெரிந்தவன் என்றும் குடும்ப வன்முறை, போதைப் பொருள் விவகாரம், மனநல பிரச்சினை ஆகிய பின்னணியைக் கொண்டவன் அவன் என்றும் போலிசார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள அவன் மீது கத்திக்குத்து தாக்குதல் தொடர்பிலும் குற்றம் சாட்டப்படவிருப்பதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மெல்பர்னில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த மக்கள் மீது அவன் வேண்டுமென்றே காரை ஓட்டிச்சென்று மோதியதில் காயமுற்ற 31 பேரில் மூன்று மாதக் குழந்தையும் அடங்கும். காயமுற்ற இரண்டு வயது குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறின.

மெல்பர்னில் மக்கள் மீது ஒருவன் காரை மோதிய இடத்தில் குழந்தை தள்ளுவண்டி ஒன்று காணப்பட்டது. அந்த சம்பவத்தில் தள்ளுவண்டியில் இருந்த ஒரு குழந்தை உள்பட நால்வர் உயிரிழந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!