ஒபாமாவின் சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தங்களில் மாற்றம்

அமெரிக்காவின் 45வது அதிபராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட டோனல்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் ஒபாமா ஏற்படுத்திய சுகாதாரப் பராமரிப்புச் சீர்திருத்தங்களில் மாற்றம் ஏற்படுவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். 'ஒபாமா கேர்' என்றழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான சட்டங்களால் நாட்டுக்குப் பொருளியல் சுமை ஏற்படுவதாகவும் இத்திட்டம் சம்பந்தப்பட்ட முகவைகள் அதனைக் குறைக்க முயலவேண்டும் என்றும் அவர் பிறப்பித்த முதல் உத்தரவு தெரிவிக்கிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒபாமாகேர் காப்பீட்டுத் திட்டம் மில்லியன் கணக் கான அமெரிக்கர்களின் சுகாதாரப் பராமரிப்பை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டது. பொதுக் காப்பீடு, முதலாளிகள் வழங்கும் காப்பீடு என்று எதையும் பெற்றிராத அமெரிக் கர்களின் சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்வ தற்காகத் தீட்டப்பட்ட இத்திட்டம் சமூக ரீதியாக செலவுமிக்க ஒன்றாக இப்போதைய ஆட்சியாளர் களால் பார்க்கப்படுகிறது. இது ஐரோப்பிய பாணி யிலான மருத்துவப் பராமரிப்பு என்றும் அவர்கள் கருதுகின்றனர். திரு டிரம்ப் தமது தேர்தல் பிரசாரத்தின்போது ஒபாமாகேர் திட்டத்தைக் குறை கூறி வந்தார்.

முன்னதாக, பதவி ஏற்றதும் முதல் உரையாற்றிய அவர், அமெரிக்காவின் நலனை முதன்மைப்படுத்தப் போவதாக உறுதி அளித்தார். மேலும், பரவலாக நடைபெறும் குற்றங்களையும் அமெரிக்க முன்னேற் றம் மற்றும் கலாசாரத்தைக் குலைக்கும் படுகொலைகளையும் தடுத்து நிறுத்தப்போவதாகவும் திரு. டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க மக்கள் ஒவ்வொருவரின் நலனுக் காகவும் ஓய்வின்றி உழைக்கப்போவதாகவும் அமெரிக்காவின் நலனே தமது முதல் முன்னுரி மையாக இருக்கும் என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட டோனல்ட் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!