இத்தாலியில் பேருந்து விபத்து: பள்ளிச் சிறுவர்கள் 16 பேர் பலி

ரோம்: ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து இத்தாலியில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 39 பேர் காயமுற்றதாக வும் அதிகாரிகள் கூறினர். விடுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்த மாணவர்கள் அங்கிருந்து ஃபுடாபெஸ்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. ஓட்டுநர் வாகனக் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அந்தப் பேருந்து சாலையைவிட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதும் தீப்பற்றிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். காயமுற்றவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக தீயணைப்புப் படையினர் கூறியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!