தென்கொரிய கலாசார அமைச்சர் திடீரென்று பதவி விலகினார்

தென்கொரிய கலாசார அமைச்சர் திடீரென்று பதவி விலகினார்

1 mins read

சோல்: தென்கொரியாவின் கலாசார அமைச்சர் திருவாட்டி சோ யூன் சன் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். திருவாட்டி பார்க் குவென் ஹை தலைமையிலான அரசாங்கத்தைக் குறை கூறிய சுமார் 10,000 கலைஞர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்ததற்காக கலாசார அமைச்சர் சோ யூன் சனும் அதிபரின் முன்னாள் ஆலோசகர் கிம் கி சூனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவ்விருவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவ்விருவரையும் கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் திருவாட்டி சோ பதவி விலகியதாகவும் அதை பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் கூறின.