டிரிபோலி: லிபியத் தலைநகர் டிரிபோலியில் கார் குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. டிரிபோலியில் எகிப்திய தூதரகம் மற்றும் இத்தாலிய தூதரகத்திற்கு அருகே ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் குண்டு வெடிப்பில் சேதம் அடைந்ததாகக் கூறப்பட்டது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அந்த இடத்தை போலிசார் சுற்றி வளைத்து பாதுகாப்பை அதிகரித்தனர்.
டிரிபோலியில் தூதரகத்திற்கு அருகே குண்டு வெடிப்பு
1 mins read

