பெய்ருட்: ஈராக்கில் வலுவிழந்து வரும் ஐஎஸ் போராளிகள் குழு சிரியாவில் அரசாங்கப் படையினரை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கில் ஐஎஸ் குழு வசம் இருந்த பல நகரங்களை அரசாங்கப் படையினர் கைப்பற்றி விட்டனர். மோசுல் நகரின் கிழக்குப் பகுதி முழுவதும் தற்போது அரசாங்கப் படை வசம் வந்துள்ளது. கூடிய விரையில் மோசுல் நகரம் முழுமையாக அரசாங்கக் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. ஈராக்கில் பல நகரங்களை இழந்துவிட்ட நிலையில் ஐஎஸ் போராளிகள் தற்போது சிரியாவில் தீவிரமாகச் சண்டையிட்டு வருகின்றனர். சிரியாவின் கிழக்குப் பகுதியில் அரசாங்கப் படை வசம் உள்ள ஒரு நகரைக் கைப்பற்ற ஐஎஸ் போராரிகள் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஈராக்கில் வலுவிழந்த ஐஎஸ் குழு சிரியாவில் கடும் தாக்குதல்
1 mins read

