தாய்லாந்து, மலேசியாவில் வெள்ளப்பெருக்கு

பேங்காக்: தென்தாய்லாந்து மாநிலங்கள் கனமழையாலும் மோசமான வெள்ளப்பெருக்கி னாலும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் வரும் நாட்களிலும் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று தேசிய பேரிடர் மையம் எச்சரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல பகுதி களில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் சாலையைக் கடக்க சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக் கப்பட்டுள்ள வேளையில் பல பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப் படுகிறது. இதனால் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட இருப்பதாக உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். இந்நிலையில் மலேசியாவில் திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்கள் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியத் தகவல்கள் கூறின. திரெங்கானுவில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்து வட்டாரங்களில் 27 பள்ளிகள் தற்காலிகமாக மூடப் பட்டன. பாதுகாப்பு கருதி சுமார் 3,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தாய்லாந்தின் யாலா மாநிலத்தில் தெருக்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மாது ஒருவர் தன் குழந்தையுடன் தெருவைக் கடக்க மிகுந்த சிரம்படுகிறார். தெற்குப் பகுதியில் உள்ள பல மாநிலங்கள் கனமழையாலும் வெள்ளப்பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!