ஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்

ஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்

2 mins read
28b60211-d290-4a55-b72a-c59cd79aacfe
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்றபோது அதைக் காண இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் வா‌ஷிங்டனில் திரண்டிருந்ததாக வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் அறிவித்துள்ள நிலையில் அதற்கு மாறான செய்திகளை வெளியிட்ட ஊடகங் களை திரு டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். ஊடகங்களும் செய்தி நிறு வனங்களும் நேர்மையற்ற முறையில் செய்திகளை வெளி யிடுவதாக திரு டிரம்ப் குற்றம் சாட்டினார். தாம் பதவி ஏற்றுக்கொண்டு உரையாற்றியபோது வா‌ஷிங்டன் நினைவு மண்டபத்தில் அதிகமான மக்கள் திரண்டிருந்ததாகவும் ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாதது போலவும் இடம் காலியாக இருப்பது போலவும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாகவும் திரு டிரம்ப் கூறினார்.

திரு டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்ட மறுநாள் அமெரிக் காவிலும் உலகின் மற்ற இடங்களிலும் டிரம்ப் நிர்வாகத் திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. குறிப்பாக வா‌ஷிங்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500,000 பேர் கலந்து கொண்ட தாகவும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டபோது கூடிய மக்கள் எண்ணிக்கையை விட இது அதிகம் என்று கூறப் பட்டது. சிட்னி, மெல்பர்ன் உள்ளிட்ட பல நகரங்களில் பெண்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரு ஒபாமா 2009ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவி ஏற்றபோது அதைக் காண திரண்ட மக்கள் கூட்டம். (இடது) அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் இம்மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றபோது திரண்ட மக்கள் கூட்டம். (வலது) படம்: ராய்ட்டர்ஸ்