தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் வெள்ளம்: 15,000 பேர் வெளியேற்றம்

1 mins read
56da68bd-0038-4a05-ac90-66772ab6f501
-

ஜோகூர்பாரு: மலேசியாவில் பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி சுமார் 15,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். சீனப் பெருநாள் நெருங்கும் வேளையில் மலேசியாவில் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள் ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஜோகூரில் மட்டும் 9,000 பேர் வீடுகளிலிருந்து வெளி யேற்றப்பட்டனர். குறிப்பாக சிகாமட், கோத்தா திங்கி பகுதிகளிலிருந்து அதிக மானோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாகப் பெய்யும் கனமழையால் ஜோகூர் மாநிலம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

ஜோகூரில் வெள்ள நிலவரம் மேம்படவில்லை என்றும் இதனால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருவதாகவும் ஜோகூர் மாநில சுகாதார மற்றும் சுற்றுப்புறக் குழுவின் தலைவர் அயுப் ரஹ்மாட் கூறினார். சிகாமட்டில் உள்ள 54 நிவாரண நிலையங்களில் தங்கி யிருப்பவர்களின் எண்ணிக்கை 6,206 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் சொன்னார். இங்கு பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.

சிகாமட்டில் வெள்ளத்தால் சேதம் அடைந்த தண்டவாளத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. படம்: பெர்னாமா