பெர்த்தில் விமான விபத்து

பெர்த்தில் விமான விபத்து

1 mins read

சிட்னி: பெர்த் நகரில் ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடந்த விமான சாகசக் காட்சியின்போது எதிர்பாராத ஒரு விபரீதம் நிகழ்ந்தது. சாகசக் காட்சியில் ஈடு பட்டிருந்த ஒரு சிறிய விமானம் பெர்த் நகரில் உள்ள ஸ்வான் ஆற்றில் விழுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் விமான சாகசங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அந்த விபத்தில் விமானியும் அந்த விமானத்தில் சென்ற மேலும் இருவரும் உயிரிழந்தனர்.