வாஷிங்டன்: அமெரிக்கா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திரு டிரம்ப்பையும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களையும் பாராட் டினார். அதே சமயம் டிரம்ப் நிர்வாகத் தினருக்கு கடுமையான சில செய்திகளை அவர் அறிவுறுத் தினார். ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டை திரு டிரம்ப் கைவிடக்கூடாது என்ற செய்தியை திருவாட்டி மே முன்வைத்தார். அத்துடன் நேட்டோ போன்ற அனைத்துலக அமைப்புகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நேற்று பின்னேரம் திரு டிரம்ப்பை திருவாட்டி தெரேசா மே சந்திக்கவிருந்தார். திரு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின்னர் அவர் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தெரேசா மே ஆவார்.
அதிபர் டிரம்ப்பை பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர்
1 mins read

