தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பிரபஞ்ச அழகி' பட்டத்தை வென்ற பிரான்ஸ் அழகி

1 mins read
b52456d8-7f1c-477f-ad68-290e8ad96bc5
-

மணிலா: பிலிப்பீன்சில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயது மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனேர் பிரபஞ்ச அழகி யாக பட்டம் சூட்டப்பட்டார். இறுதிச் சுற்றில் பங்கேற்ற 12 பேரைத் தோற்கடித்து ஐரிஸ் மிட்டனேர் வெற்றி பெற்றார். பாரிஸ் நகரைச் சேர்ந்த ஐரிஸ் பல் மருத்துவ மாணவி ஆவார். "போட்டியில் நான் வெற்றி பெற்றது வியப்பாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது," என்று ஐரிஸ் மிட்டனேர் கூறினார். "பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நான் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.

மக்களை நேரில் சந்தித்துப் பேசுவதன் மூலம் மக்களைப் புரிந்துகொள்ளவும் விரும்பு கிறேன். அதனால்தான் இந்தப் பட்டம் எனது கன வாக இருந்தது," என்று மிட்டனேர் கூறினார். பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக பிரபஞ்ச அழகிக் கான போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற பிரான்ஸ் நாட்டு அழகி ஐரிஸ் மிட்டனேர். படம்: ராய்ட்டர்ஸ்