அங்காரா: துருக்கியில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் இதுவரை அரசாங்க ஊழியர்கள் சுமார் 90,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவரத்தை அந்நாட்டு தொழிலாளர் அமைச்சர் மெஹ்மட் மியுஸினோகுலு செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் அரசாங்க ஊழியர்கள் 125,485 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சொன்னார். புரட்சிக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் முஸ்லிம் சமய போதகர் ஃபெதுல்லா குலனின் ஆதரவாளர்களைத் துடைத்தொழிப்பதில் துருக்கிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோன்ற புரட்சி மீண்டும் ஏற்படாமல் இருக்க துருக்கிய அதிபர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
துருக்கியில் அரசாங்க ஊழியர்கள் 90,000 பேர் பணிநீக்கம்
1 mins read

