அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் பதவி நீக்கம்

அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் பதவி நீக்கம்

1 mins read
9e3c43c3-1e57-40f3-884c-8d42143f5d0f
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள குடியேற்றத் தடை உத்தரவை ஏற்க மறுத்த தற்காலிக அரசாங்க தலைமை வழக்கறிஞர் சேலி யேட்ஸ் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். திரு ஒபாமா அதிபராக இருந்த போது அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்ட திருவாட்டி சேலி யேட்ஸ் முன்னதாக திரு டிரம்பின் ஆணையை அமலாக்க வேண் டாம் என்று அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றும் வழக் கறிஞர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அவரை திரு டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். யேட்ஸ் அம்மையார் நீதித்துறைக்கு துரோகம் செய்து விட்டார் என வெள்ளை மாளிகை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. யேட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெர்ஜீனியா கிழக்கு மாவட்டத்தின் அரசாங்க வழக்கறிஞராகப் பணி யாற்றி வரும் டானா பொயண்டே இப்போது தற்காலிக அரசாங்க தலைமை வழக்கறிஞராக நியமிக் கப்பட்டிருக்கிறார்.