டிரம்ப்பின் கோர்சச் தேர்வுக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு

டிரம்ப்பின் கோர்சச் தேர்வுக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு

1 mins read
476b662a-783e-472a-8690-8f1c0687873f
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் உயர் பதவியான உச்ச நீதிமன்றத் தின் நீதிபதி பொறுப்புக்கு பழமை வாதியான நெய்ல் கோர்சச்சை அதிபர் டிரம்ப் முன்மொழிந் துள்ளார். தற்போது கொலொரடோ மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் திரு கோர்சச் நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். டிரம்ப்பின் நியமனத்தை செனட் சபை ஏற்றுக்கொண்டால் மறைந்த நீதிபதி அன்டோனின் ஸ்கேலி யாவுக்குப் பதிலாக 49 வயது கோர்சச் உச்ச நீதிமன்றத்தின் நீதி பதியாவார். ஆனால் டிரம்ப்பின் தேர்வுக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது கருக்கலைப்பு, துப்பாக்கிக் கட்டுப் பாடு, குடியேறிகள் உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன. விரித்தாடுகின்றன. இந்த நிலையில் திரு கோர் சச்சை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இது குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், "அறிவாற்றல் மிக்கவர். நிகரற்ற சட்ட அனுபவங்களைப் பெற்றவர்," என்று கோர்சச் பற்றி குறிப்பிட்டார்.

அதிபர் டிரம்ப், நீதிபதி கோர்சச்சுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார். ஆனால் டிரம்ப்பின் தேர்வுக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்