பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்கே உள்ள பெரிய தொழிற்சாலையில் நேற்-று தீப்பற்றிக்கொண்டதில் மூவரைக் காணவில்லை என்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் தீக்காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கேவைட் மாநிலத்திலுள்ள ஜெனரல் டிரியாஸ் நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காயமுற்றோரில் மூவர் ஜப்பானி யர்கள் என்றும் அவர்கள் கூறினர். கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்று பிற்பகலில் தீ முற்றாக அணைக்கப்பட்டது. தீப்பற்றியதும் மூன்று மாடிக் கட்ட டத்திலிருந்து குதித்த பலரும் படுகாயமுற்றனர். அச்சமயத்தில் 5,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி
18 மணி நேரம் தொழிற்சாலையைச் சிதைத்த தீ
1 mins read
-

