கோலாலம்பூர்: அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு சிங்கப்பூருக்கு வழங்கப்பட்ட பெட்ரா பிராங்கா தீவுக்கு மீண்டும் மலேசியா சொந்தம் கொண்டாடுகிறது. அதற்கான மனுவை அனைத் துலக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் மலேசியா தெரிவித்தது. பெட்ரா பிராங்கா யாருக்குச் சொந்தம் என்பதை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் 2008ஆம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் மலேசியா கேட்டுக்கொண்டுள் ளது. இம்மாதம் 2ஆம் தேதி பெட்ரா பிராங்காவுக்கு உரிமை கோரும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது என்று மலேசிய தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் வெளி யிட்ட அறிக்கை குறிப்பிட்டது. "அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சான்றுகள் மிக முக்கியமானவை," என்று மனுவில் மலேசியா தெரிவித்தது.
சிங்கப்பூருக்குச் சொந்தமான தீவுக்கு மீண்டும் உரிமை கோருகிறது மலேசியா. கோப்புப் படம்

