கோலா நெராங்: மலேசியாவில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் புழங்குகின்றனரா என்பதை காவல்துறை தீவிர மாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டின் காவல்துறைத் தலைவர் டான் காலின் அபுபக்கர் தெரிவித்துள்ளார். போதைப்பொருளை மாணவர்கள் மூலம் விநியோகிக் கும் கும்பல்கள் மலேசியாவில் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதன் மூலம் அவர்களை ஈர்த்து அந்தக் கும்பல் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார். கெடா மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு 113 போதைப் பொருள் வழக்குகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவற்றில் 8 வழக்குகள் ஜனவரியில் பதிவானவை. போதைப்பொருள் கும்பலிடம் மாணவர்கள் சிக்கிக்கொள் ளாமல் காப்பாற்றுவதற்கு பள்ளிகளுடன் இணைந்து காவல்துறை செயல்படுவதாக அவர் கூறினார். இதற்காக பள்ளிகள் உள்ள பகுதிகளில் காவல்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

