சிட்னி: ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர், சொந்தமாக புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளதால் பிரதமர் மால்கம் டர்ன்புல்லுக்குத் தலைவலி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்துக்கான ஆதரவு பாதாளத்தில் சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தேர்தல் நடைபெற்றால் அவரது லிபரல் தேசிய கூட்டணி தோல்வி அடையும் என்றும் கூறப்படுகிறது. லிபரல் கட்சியிலிருந்து வெளியேறி பழமைவாத கட்சியை பெர்னார்டி தொடங்கவிருப்பதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்ட தகவல் ஆளும் கட்சி விரிசலை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலிய ஆளும் கட்சியில் விரிசல்
1 mins read

