வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுடன் ஒரு கட்டுக்கோப்பான உறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு நாடுகளும் பயன்பெறும் என்று சீன அதிபர் ஸி ஜீன்பிங்குக்கு நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்து சீன அதிபர் ஸி எழுதிய கடிதத்திற்காக நன்றி தெரிவித்துக்கொண்டதோடு சீனப்புத்தாண்டு கொண்டாடும் சீன மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
டிரம்ப்: சீனாவுடன் கட்டுக்கோப்பான உறவை விரும்புகிறோம்
1 mins read

