வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் விதித்த பயணத் தடையை அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத் துள்ளது. இதற்கு அமெரிக்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றமும் இணக்கம் தெரிவித்து பயணத் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. ஈரான், ஈராக், ஏமன், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் பயணிகளும் அகதிகளும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிபர் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தார்.
டிரம்ப் விதித்த பயணத் தடை தற்காலிக நிறுத்தம்: உறுதிப்படுத்திய நீதிமன்றம்
1 mins read

