வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் சந்தித்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயும் இரு தரப்பு வர்த்தக, பாதுகாப்பு உறவை வலுப் படுத்த உறுதி தெரிவித்தனர். அமெரிக்கா பாரம்பரியமாக ஜப்பானின் பாதுகாப்புக்கு அரணாகத் திகழ்ந்து வருகிறது. இதற்காக ஜப்பானில் அமெரிக்கப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் பொறுப்பு ஏற்ற திரு டிரம்ப், இந்தக் கடப்பாடு குறித்து கேள்வி எழுப்பி யிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது.
புளோரிடா கடற்கரைக்குப் புறப்படுவதற்காக 'ஏர்ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் ஏறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, அவரது மனைவி அகி அபே. படம்: ராய்ட்டர்ஸ்

