குடியுரிமை விதிமுறைகள்; சுவிட்சர்லாந்து மக்கள் வாக்களிப்பு

குடியுரிமை விதிமுறைகள்; சுவிட்சர்லாந்து மக்கள் வாக்களிப்பு

1 mins read

சூரிக்: சுவிட்சர்லாந்தில் நாட்டின் கடுமையான குடியுரிமை விதி முறைகளைத் தளர்த்துவது குறித்து பொதுமக்கள் வாக் கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பிறந்து விட்டால்மட்டும் ஒருவருக்கு குடி யுரிமை கிடைத்துவிடும் என்று கூறிவிட முடியாது. மேலும் சுவிட்சர்லாந்தின் குடி யுரிமையைப் பெறுவதற்கு ஒருவர் 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

இதற்கு அரசாங்கம் நடத்தும் தேர்வுகளையும் நேர்காணல்களை யும் குடியுரிமை பெற விரும்புவோர் கடந்து வர வேண்டும். இவற்றுக் கான செலவும் அதிகம். இந்த நிலையில் மூன்றாம் தலைமுறையினர் எதிர்நோக்கும் சிரமங்களைத் தவிர்க்க புதிய உத் தேச திட்டம் உதவும் என்று கூறப் படுகிறது